DIG நாலக - நாமலின் குரல்களை ஆராய வெளிநாட்டு நிபுணர்கள் - sonakar.com

Post Top Ad

Saturday, 13 October 2018

DIG நாலக - நாமலின் குரல்களை ஆராய வெளிநாட்டு நிபுணர்கள்



ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் பொலிஸ் உளவாளி நாமல் குமார மற்றும் டி.ஐ.ஜி நாலக டிசில்வா ஆகியோருக்கிடையிலான உரையாடல் ஒலிப்பதிவை பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.



இப்பின்னணியில் இருவரது குரல்களும் தனித்தனியாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வெளிநாட்டு நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையும் நீதி மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment