வெளிநாட்டு நீதிபதிகள் தலையிடுகிறார்கள், புத்த சாசனம் சீரழிக்கப்படுகிறது, பிக்குகள் கைது செய்யப்படுகிறார்கள் என மக்களை வீணாகக் குழப்பும் வேலையில் ஈடுபட்டுள்ள மஹிந்த ராஜபக்ச, தினமும் காலையில் எழுந்து ரணில் இருக்கும் பக்கம் திரும்பி கும்பிட்டு வணங்க வேண்டும் என தெரிவிக்கிறார் அமைச்சர் தலதா அத்துகோறள.
2002ல் பிரதமராக இருந்த போது யுத்த குற்ற விசாரணைகளில் வெளியாரின் தலையீட்டை ஏற்க மறுத்து ரணில் விக்கிரமசிங்க திடமான நிலைப்பாட்டில் இருந்ததனாலேயே மஹிந்த மின்சாரக் கதிரையிலிருந்து தப்பியுள்ளதாகவும் அவரை எங்கும் யாரும் விசாரணைக்கு அழைக்க முடியாத பாதுகாப்பு இருப்பதாகவும் தலதா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மஹிந்த கண்டபடி பொய் கூறி மக்களைக் குழப்புவதாகவும் தலதா அத்துகோறள தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment