தமிழ் மக்களுக்கு எதிரான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக வர அனுமதிக்கப் போவதில்லையென குமார வெல்கம சொல்லியிருக்கும் கருத்து, எல்லை மீறியது எனவும் கூட்டு எதிர்க்கட்சி உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
வெல்கமவின் கருத்துக்கமைய கூட்டு எதிர்க்கட்சிக்குள் தமிழர்களுக்கு எதிரான சிந்தனைப் போக்குள்ளவர்கள் இருப்பதோடு அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக முனைவதாக அர்த்தமாகி விடும் என பந்துல தெரிவிக்கிறார்.
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராவதை விரும்பாத நிலையில் கருத்து வெளியிட்டு வரும் வெல்கம, மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்கப் போவதில்லையெனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment