ஆண்டு 1 முதல் ஆண்டு 13 வரையான பாடசாலைக் கல்வி கட்டாயம் என்பதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சட்டவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் தலதா அத்துகோறள.
அடுத்த வருடத்துக்குள் இச்சட்டம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கின்ற அவர், பாடசாலைக் கல்வி குறிப்பிட்ட வயதில் கட்டாயம் வழங்கப்பட வேண்டியது எனவும் அதில் பெற்றோரின் முழு அளவிலான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இந்நடைமுறைக்கமைய அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment