ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்த நிலையில் பிரான்சிலிருந்து தனக்கு பணம் அனுப்பியும் கட்டளையிட்டும் வந்த துசார பீரிஸ் எனும் நபர் குறித்தும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மஹிந்த அரசில் பாதுகாப்பு அமைச்சுடனும் இராணுவத்துடனும் நெருங்கிப் பணியாற்றிய நபரே துசார எனவும் குறித்த நபர் பின்னர் பிரான்சில் அரசியல் தஞ்சமடைந்து அங்கு தமிழ் டயஸ்போரா குழுக்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளதாக சி.ஐ.டியினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், ஐரோப்பாவில் இயங்கும் மஹிந்த ஆதரவு சிங்கள டயஸ்போரா குழுவான குளோபல் ஸ்ரீலங்கன் போரம் அமைப்புடன் குறித்த நபர் இணைந்து செயற்படுவதாகவும் மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபர், மஹிந்தவின் நிதியுதவியில் பிரபாகரன் எனும் பெயரில் திரைப்படம் ஒன்றையும் இயக்கியிருந்தமையும் அண்மையில் நாமல் குமார வெளியிட்ட ஒலிப்பதிவில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரைக் கொலை செய்யும் திட்டம் பற்றி விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment