எழுத்தாளர் ஜமால் கஷோகி விவகாரத்தில் அவசரப்பட்டு வதந்தி பரப்பாத, நம்பாத அரபு, இஸ்லாமிய மற்றும் இதர நாடுகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் சவுதி மன்னர் சல்மான்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், சவுதி - துருக்கி கூட்டுக் குழு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிலையில் எழுந்தமானமாக சவுதி அரேபியாவைக் குற்றஞ்சாட்டாதவர்களுக்கென இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் இரு நாட்டு பிரதிநிதிகளும் உள்ளடங்கிய குழுவொன்று இன்று பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் சவுதி சென்று அரச குடும்பத்தை சந்தித்துள்ளதுடன் ட்ரம்ப் சவுதி மன்னருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
எனினும், இறுதியாக, குறித்த நபர் தூதரகத்துக்கே சென்றதாகவும், அதன் பின்னரே காணாமல் போயுள்ளதாகவும் தொடர்ந்தும் நம்பப்படுகின்றதோடு சவுதி அரேபியா கொலையை ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் சி.என்.என். இன்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment