பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் எதிர்வரும் வாரம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பதவி விலகக் கூடும் என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பூஜித ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அரசியலில் குதிக்கவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி சார்பான தளங்கள் தெரிவிக்கின்றன.
முன்னராக ஜனாதிபதி பூஜிதவை பதவி விலகச் சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் ஜனாதிபதி செயலகம் அதனை மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment