நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மீண்டும் ஆட்சிபீடமேறக் கனவு கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவே, கூட்டு எதிர்க்கட்சிக்குள் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களை தனது பினாமிகள் மூலம் விதைத்து வருவதாக தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.
தனது கணிப்பின் படி, வெல்கம கோத்தபாயவுக்கு எதிராக பேசுவதும், வாசுதேவ நானாயக்கார சமல் ராஜபக்சவை வேட்பாளராக்கக் கோருவதும் மஹிந்தவின் மேற்பார்வையில் நடாத்தப்படும் நாடகம் எனவும் மஹிந்த ராஜபக்ச ஒரு தந்திரக் காரன் எனவும் ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது புதல்வர் நாமல் ராஜபக்ச 35 வயதை எட்டாத நிலையில் பெரும்பாலும் தனது குடும்பத்திலிருந்து வேறு ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அண்மையில் இந்தியா சென்றிருந்த வேளையில் மஹிந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment