சரியான தருணத்தில் 'அறிவிப்பு' வரும்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Sunday, 14 October 2018

சரியான தருணத்தில் 'அறிவிப்பு' வரும்: கோத்தா!


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது சரியான தருணத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.



மஹிந்த ராஜபக்சவுக்கு இருக்கும் சட்டச் சிக்கல் காரணமாக அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோத்தபாயவின் பெயர் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையிலேயே, இரு தடவைகள் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்த முடியாது போன ஐக்கிய தேசியக் கட்சியே இக்கேள்வியை எழுப்பி வருவதாகவும், ஆனாலும் கூட்டு எதிர்க்கட்சியின் அறிவிப்பு சரியான தருணத்தில் வரும் எனவும் கோத்தா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment