அண்மையில் இடம்பெற்ற தேசிய மீலாத்விழா-2018 க்கான போட்டி நிகழ்ச்சிகளில் கனிஷ்ட பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய மாணவன் எம்.எம். சாகீப் அத்னான் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் தமிழ்,ஆங்கில பேச்சுப்போட்டிகளில் பங்குபற்றி தேசிய ரீதியிலும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலும் பல பரிசில்களைப் பெற்றுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹிர் ஆசிரியை ஏ.எல்.ஜெஸ்மின் சிஹானா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராகிய எம்.எம்.சகீப் அத்னானை பாடசாலை சமூகம் கடந்த 2018.10.15 ஆம் திகதி அதிபர் ஏ.சி.எம். இஸ்மாயில் தலைமையில் பாராட்டி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்
-எம்.எஸ்.எம்.ஸாகிர்
No comments:
Post a Comment