மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ச கொலைத் திட்டம் பற்றி பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மௌனம் காத்து வருவதோடு நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருவது தொடர்பில் மைத்ரி அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த போதிலும் கூட்டணி அரசில் பொலிஸ் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சி வசமே இருக்கின்ற நிலையில், இது தொடர்பில் பிரதமர் தரப்பு ஆர்வக் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தன் மீதான கொலை அச்சுறுத்தலைக் கூட உடனடியாக விசாரிக்க முடியாத மைத்ரி பதவி விலக வேண்டும் என மேர்வின் சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment