இந்தியாவின் மும்பை நகரில் நாளை 12ம் திகதி மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பங்கேற்கும் விவாதப் போட்டியில் பங்கேற்க அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகம்மட் அலியார் நப்லி முகம்மட் எனும் மாணவன் தேர்வாகியுள்ளார்.
இவர் அக்கரைப்பற்றின் சிரேஷ்ட பொறியியலாளர்களுள் ஒருவரும், இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமுமான பொறியியலாளர்.எஸ்.எல். முகம்மட் அலியார் மற்றும் சலீத்தா அலியார் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
ஐக்கிய இராச்சியம்இ ஜேர்மனிஇ ஹொங்கொங்இ சிங்கப்பூர்இ இந்தியா உட்பட்ட நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்லம் அகமட்
No comments:
Post a Comment