ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் ஸ்ரீலசுக ஒன்று பட்டு ரணிலை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய கூட்டணி அரசமைக்க மைத்ரியின் ஆதரவைக் கோரியுள்ளார் வாசுதேவ நானாயக்கார.
நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் குரூப் 16 உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இது குறித்து பேசியுள்ள அவர் தயாசிறி ஜயசேகர உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
2020 வரை கூட்டாட்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதனைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment