வாழைச்சேனை கடதாசி ஆலை புணரமைப்பு செய்வதற்கான அங்கீகாரத்திற்காக இவ்வருடம் டிசம்பர் மாதம் வழங்குவதற்காக பத்திரங்கள் தயாரிக்கப்படுவதாக வர்த்தக வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார்.
இன்று புதன் கிழமை மாலை வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் கடதாசி ஆலையை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
எம்பிலிப்பிட்டடிய கடதாசி ஆலையை கொரிய நாட்டு நிறுவனத்துடன் அரசாங்கமும் இணைந்து நூற்றி இருபது கோடி ரூபா செலவில் புணர்நிர்மானம் செய்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்திற்காக எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளது.
அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாழைச்சேனை கடதாசி ஆலையை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புணர்நிர்மானம் செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு இவ்வருடம் டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கிகாரத்திற்காக சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா அமைப்பாளர் எல்.ரீ.எம்.புர்கான் வர்த்தக வாணிப அமைச்சின் உயர் அதிகாரிகளும் கடதாசி ஆலையின் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
-அனா
No comments:
Post a Comment