பொலிசாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பிரபல பாதாள உலக பேர்வழி பண்டா என அறியப்படும் அசித காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரும்புக் கூட்டுத்தாபனம் அருகில் வைத்து குறித்த நபரைக் கைது செய்ய பொலிசார் முயற்சி செய்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் பதில் தாக்குதலின் போது பண்டா காயமுற்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமுற்ற நபர் ஒருவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment