அம்பலந்தொட்ட பகுதியில் இரு தினங்களுக்கு முன் அதிகாலை வேளையில் 17 வயது யுவதி கடத்தப்பட்டிருந்த சம்வம் திட்டமிட்ட நாடகம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தல் குழுவிலிருந்த நபர் ஒருவருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையிலிருந்து காதல் உறவின் பின்னணியிலேயே இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் இருவரும் திஸ்ஸமகராம பகுதியில் ஒன்றாக உலவும் போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஏழு வருடங்களாக தமக்குள் நிலவி வந்த காதலின் பின்னணியில் ஒன்று சேர்வதற்காகவே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment