செப்டம்பர் மாதத்தில் உலகில் நேர ஒழுங்கை வெற்றிகரமாகக் கடைப்பிடித்த விமான சேவையாக ஸ்ரீலங்கனுக்கு கௌரவம் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்கனின் 91 வீதமான விமான சேவைகள் குறித்த நேரத்திற்கு இடம்பெற்றிருப்பதாக இது குறித்து தகவல் திரட்டும் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment