பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் இயங்கி வந்த கூல் பிளனட் என அறியப்படும் ஆடை வர்த்தக நிலையம் இன்று காலை தீக்கிரையாகியுள்ள நிலையில், பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தக நிலையத்துக்குள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும் தக்க தருணத்தில் தீ பரவுவது கண்டிறியப்பட்டதனால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரசே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்பதோடு நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் தீக்கிரையாகியுள்ளமையும் அடுத்த வருட முற்பகுதியில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment