கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீபுக்கு எதிராக மாநகரசபை உறுப்பினர்கள் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது, மாநகரசபையில் இடம்பெற்றுவருவதாகக்கூறப்படும் பலகோடிருபா பெறுமதியான நிதிமோசடிகள் நடைமுறைக்குமாறான சர்வாதிகாரச் செயற்பாடுகள் பாரபட்சங்கள் நிதிநிலையியற்குழுவினதோ பொதுச்சபையினதோ அங்கீகாரமின்றி தன்னிச்சையான செவலுசெய்யப்படுகின்றது. கேட்டால் சொல்லமுடியாது என சர்வாதிகாரப்பதில் இப்படி பல குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டுப்பத்திரம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 6மாதங்களில் மாதாந்தக்கூட்டங்கள் நடைபெற்றிருந்தும் இதுவரை எந்தக்கூட்டத்திலும் மாதாந்த வரவுசெலவுஅறிக்கை வேலைத்திட்ட முன்னேற்ற அறிக்கைஎதுவுமே சமர்ப்பிக்கப்படவில்லை யென்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டததக்கது.
-கல்முனை நியாஸ்
No comments:
Post a Comment