ஆறு வருடங்களில் நிறைவுறும் வகையில் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசாரவுக்கு பிணை வழங்கப் போவதில்லையென உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளது.
நீதிபதிகள் ஈவா வனசுந்தர, பிரசன்ன ஜயவர்தன மற்றும் நலின் பெரேரா ஆகிய மூவர் கொண்ட குழு, ஞானசாரவினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்திருந்த நிலையில் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியிலேயே ஞானசாரவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment