மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் (கோத்தா) தான் தலைவனாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வந்த குமார வெல்கமவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பு வெறுப்புகளுக்கமைய வெல்கம நடந்து கொள்வதாக மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், மஹிந்தானந்த - கெஹலிய போன்றோர் வீரியமற்று தலை குனிந்திருந்த காலத்தில் தானே ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டாட்சியை எதிர்த்து சபையை விட்டு வெளியேறியிருந்ததாகவும் தற்போது தனக்கெதிராக கதை சோடிப்பதாகவும் வெல்கம பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் தான் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் ஜனாதிபதி வேட்பாளருக்கு 'ஜனநாயகம்' தெரிந்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment