மக்கா - மதீனா அதிவேக இரயில் சேவை வியாழன் முதல் ஆரம்பம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 October 2018

மக்கா - மதீனா அதிவேக இரயில் சேவை வியாழன் முதல் ஆரம்பம்!


மக்கா - மதீனா நகரங்களுக்கிடையிலான அதிவேக இரயில் சேவை வியாழன் (04) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Haramain high-speed train  எனும் பெயரில் அறியப்படும் குறித்த ரயில் சேவை 16 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இரு நகரங்களுக்கிடையிலான 450 கி.மீ தூரத்தை இரு மணி நேரத்தில் அடையும் வகையில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வருடன் ஏப்ரல் வரை வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நாளொன்றுக்கு இரு தடவைகள் பயணிக்கும் குறித்த ரயில் சேவை ஏப்ரலின் பின் அதிகரிக்கப்படும் எனவும் இதனூடாக யாத்திரிகர்களின் பயணம் இலகுவாக்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment