வட-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெறுவது அவசியம் என கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன் இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விஜயகலாவை விளக்கமறியலில் வைப்பதற்கான வாதம் எதுவும் முன் வைக்கப்படாத நிலையில் கொழும்பு மஜிஸ்திரேட் ஐந்து லட்ச ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் 7ம் திகதி விசாரணை தொடரவுள்ள நிலையில் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment