யாழ் மாவட்டத்தில் தமது நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாகவும் இதன் பின்னணியில் வவுனியாவில் தமது குழுவின் 'சேவையைத்' தொடரப் போவதாகவும் வடபுலத்தில் இயங்கும் கிரிமினல் குழுவாக சித்தரிக்கப்படும் ஆவா குழுவின் பெயரில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் தமது குழு உறுப்பினர்கள் மற்றும் உளவாளிகள் இயங்கும் இடங்களையும் அறிவித்துள்ளதோடு வீதியோரங்களில் நின்று பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் இளைஞர்களைத் திருத்தப் போவதாகவும் அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிசாருக்குத் தகவல் வழங்குவோரை எச்சரிப்பதாகவும் மக்களுக்குப் பிரச்சினையென்றால் தமது குழு அங்கு முன்நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment