கொழும்பிலிருந்து புத்தளத்துக்குக் குப்பைகளைக் கொண்டு வரும் திட்டத்துக்கு எதிராக அங்கு இடம்பெற்று வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இன்று ஜும்மா தொழுகைக்குப் பின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தூய்மையான புத்தளம் எனும் அடிப்படையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் அரச தரப்பிலிருந்து இதுவரை முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment