மைத்ரி மற்றும் கோத்தபாயவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்ட பொலிஸ் உளவாளி நாமல் குமாரவை சந்திக்கச் சென்றிருந்த இந்திய பிரஜையொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கைதான இந்தியர் அடிக்கடி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இப்பின்னணியில் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச விரைவில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, குறித்த இந்திய பிரஜை மனநிலை சரியில்லாதவர் என இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment