ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை விட்டு விலகுவதற்கான சரியான தருணம் வந்து விட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
மீண்டும் ஆட்சி பீடமேறுவதற்கான பலத்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் போட்டி கட்சியின் பினாமித் தலைவரிடமிருந்து அப்பதவியைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் சுந்திரக் கட்சிக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
எனினும் தமது கூட்டாட்சி 2020 வரை தங்குதடையின்றித் தொடரும் என ரணில் - மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment