கடன் மூலம் பல நாடுகளை தன் வலைக்குள் சிக்க வைத்துள்ள சீனா ஹம்பாந்தோட்டையில் இராணுவத்தைக் குவிக்கும் என தெரிவிக்கிறார் அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ்.
ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் கடனை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் சீனா, அதன் மூலம் மறைமுகமாக பாரிய இலாபம் அடைந்து வருவதாகவும் காலப் போக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் எனவும் பென்ஸ் மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், சீனா தம்மை வற்புறுத்திக் கடன் தரவில்லையென இலங்கை அரசு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment