தனது தந்தை மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலேயே இடைக்கால அரசொன்று அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
பிரதமர் மற்றும எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தைக் கைவிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி தற்போது கூட்டணி அரசைக் கலைத்து இடைக்கால அரசொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையிலேயே அவ்வாறு ஒரு அரசமைக்கப்பட்டால் அது தனது தந்தை மஹிந்த தலைமையிலேயே அமைய வேண்டும் என நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment