வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றும் எழுத்தாளர் ஒருவர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றதன் பின் காணாமல் போயுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் கருத்து முறுகலை உருவாக்கியுள்ளது.
ஜமால் கசோகி என அறியப்படும் குறித்த எழுத்தாளர் இறுதியாக தூதரகத்துக்கே சென்றதாகவும் அவர் அங்கே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் துருக்கி தெரிவிக்கிறது. இதனை நிராகரித்துள்ள சவுதி அரேபியா தாமும் அவரைத் 'தேடுவதாக' தெரிவிக்கிறது.
சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை கடுமையாக விமர்சித்து வந்த நிலையிலேயே குறித்த நபர் தற்போது காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment