ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் பெயரில் ஆரம்பித்த தமது கட்சிக்கு ஜி.எல். பீரிசைப் பினாமித் தலைவராக நியமித்திருந்த மஹிந்த ராஜபக்சவிடம் கடசித் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் பீரிஸ்.
அடுத்த பொதுக் கூட்டத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
பிக்குகள், விவசாயிகள், கலைஞர்கள், தொழிற்சங்கங்களைக் கொண்ட பாரிய அமைப்பாக பெரமுனவை உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment