உலக சந்தையில் சீனி விலை உயர்ந்துள்ள நிலையில் தற்காலிகமாக இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தொன் சீனியின் விலை 300 அமெரிக்க டொலரிலிருந்து 340 ஆக உயர்ந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு விலைக்கமைய இறக்குமதியாளர்களுக்கு 14 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் தற்சமயம் இப்பின்னணியில் இறக்குமதியைத் தவிர்ப்பதாகவும் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
இலங்கையில் மாதமொன்றுக்கு சராசரியாக 40,000 - 50,000 மெற்றிக் தொன் சீனி தேவைப்படுவதாகவும் பண்டிகைக்காலங்களில் அது மேலும் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment