வடபுலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படும் ஆவா குழுவை அடக்க இராணுவம் தயாராக இருக்கிறது என இராணுவ தளபதி தெரிவித்திருந்த நிலையில் பொலிசாரே அதனைக் கையாள முடியும் எனவும் இராணுவம் தேவையில்லையெனவும் தெரிவிக்கிறார் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.
தாம் செய்வது மக்கள் சேவையென தெரிவிக்கும் ஆவா குழு தற்போது வவுனியா வரை தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கிறது.
இந்நிலையில், பொலிசார் ஆவா குழுவைக் கையாள்வார்கள் என அமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment