பொலிஸ் நிலையத்துக்குள் தவறுதலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெடிகம பொலிஸ் நிலையத்திலேயே துப்பாக்கி கை மாற்றப்படும் போது இச்சம்பவம் இடமபெற்றதாகவும் இது தவறுதலான சம்பவம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காலில் காயமுற்ற நிலையில் குறித்த சார்ஜன்ட் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment