நாடு அதாளபாதாளத்துக்குள் வீழ்வதைத் தவிர்க்குமுகமாக இடைக்கால அரசொன்றை அமைத்து அதிகாரத்தைப் பொறுப்பேற்கும் முயற்சி வெறும் பேச்சளவிலேயே இருப்பதாகவும் இது வரைக்கும் அது பற்றி தீவிரமாக யாருடனும் கலந்துரையாடவில்லையெனவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
மைத்ரி - மஹிந்த அண்மையில் எஸ்.பி திசாநாயக்கவின் வீட்டில் சந்தித்துக்கொண்டதையடுத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் உருவாக்கப்பட்டிருந்த இடைக்கால அரசு பற்றிய எதிர்பார்ப்பு வேறு எந்த முன்னேற்றத்தையும் காணாத நிலையிலேயே மஹிந்த இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, 2020 வரை கூட்டாட்சி தொடரும் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மைத்ரி அணியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment