தன் மீது தொடர்ச்சியாக போலிக் குற்றச்சாட்டுகளும் சேறு பூசும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வரும் நிலையில் அரசியல் அலுத்துப் போவதாக தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.
எனினும், வாக்காளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைத் தகர்க்க விரும்பாத காரணத்தினால் தனது பங்களிப்பைத் தொடர்வதாகவும் தனது தாயார் கூட அரசியலைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னரெல்லாம் யார் வேண்டுமானாலும் தன்னை சந்திக்க அனுமதி வழங்கி வந்த போதிலும், இனி வரும் காலங்களில் அவ்வாறு அனுமதிக்க அச்சமாக இருப்பதாகவும் சந்தித்து போட்டோ எடுப்பவர்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு இலஞ்சம் பெற்றதாக போலிப் பரப்புரைகள் நிகழ்த்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment