சவுதி அரேபியாவில் வருமான வரி முறைகேடு மற்றும் ஊழலை முழுமையாக முறியடிக்கும் வகையில் உலகின் தனவந்தர்களுள் ஒருவரான வலீத் பின் தலால் உட்பட நாற்பதுக்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டு அரசுக்கான வருமானம் மீட்கப்பட்டதைத் தழுவி பாகிஸ்தானிலும் அதிரடி ஊழல் தடுப்பு நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, ஊழல் முறைகேடுகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம் வழங்கும் வகையிலான சட்டம் இயற்றப்படவுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உட்பட பெரும்புள்ளிகள் குறி வைக்கப்படவுள்ளதாக பாலிஸ்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment