நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஏலவே நோய்வாய்ப்பட்டிருந்த ஞானசாரவுக்கு ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் நிலையில் அவருக்கு வெளியிலிருந்து உணவு வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பொது பல சேனா.
2015 தேர்தலோடு பிரதான அரசியல் கட்சிகளால் ஒதுக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வா, ஆங்காங்கு பௌத்த விவகாரங்களில் தலையிட்டு வரும் பின்னணியில் பொது பல சேனா ஆதரவு துறவிகளுடன் சேர்ந்து இக்கோரிக்கையை வழி மொழிந்து குரல் எழுப்பியுள்ளார்.
கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் உயிரச்சுறுத்தல் உள்ள நிலையில் ஞானசாரவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது கடமையெனவும் அதற்கமைவாக அவருக்கு வெளியிலிருந்து உணவு வழங்க அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment