முரண்டு பிடித்த பொலிஸ் சார்ஜன்டுக்கு ஜனாதிபதியிடமிருந்து பணப் பரிசு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 October 2018

முரண்டு பிடித்த பொலிஸ் சார்ஜன்டுக்கு ஜனாதிபதியிடமிருந்து பணப் பரிசு!


சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்றதாகக் கருதி, தான் தடுத்து வைத்திருந்த லொறியொன்றை மறு நாளே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெபுவான சந்தியில் ஆயுதத்துடன் நின்று சிறு பதற்றத்தை உருவாக்கி, தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்டுக்கு ஜனாதிபதி 1 மில்லியன் ரூபா நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.


புலிகளால் ஆறு மாத காலம் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த குறித்த சார்ஜன்ட், தான் நேர்மையாகவே நடந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

இன்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இவ்வாறு நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment