பூஜிதவின் செயற்பாடுகளில் மைத்ரி முழு அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 October 2018

பூஜிதவின் செயற்பாடுகளில் மைத்ரி முழு அதிருப்தி!


ஸ்ரீலங்கா பொலிஸில் முழு அளவிலான மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் பூஜித முதல் அடி மட்டம் வரை பாரிய மாற்றங்களை செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, பூஜிதவின் செயற்பாடுகளுக்கு தானும் பிரதமருமே பழியேற்று வருவதாகவும் மாற்றங்கள் அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் முறையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment