இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ரோஹிங்ய அகதிகளை திருப்பியனுப்பும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது இந்தியா.
இப்பின்னணியில் 2012ல் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏழு பேரை முதற்கட்டமாக இவ்வாரம் திருப்பியனுப்புவதாகவும் நாளைய தினம் (வியாழன்) எல்லையில் மியன்மார் இராணுவத்தினரிடம் அவர்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 40,000 ரோஹிங்யர்கள் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள அதேவேளை அதில் 15,000 பேரே ஐ.நா ஊடாக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment