அமைச்சுப் பொறுப்புக்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பல நிர்வாக மாற்றத்துக்கு மைத்ரிபால சிறிசேன தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எதிர்வரும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்வுகூறப்படுகின்றதோடு புதிய அமைச்சு செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியின் பின் பாரிய மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கை-மாற்றம் மாத்திரமே இடம்பெற்றிருந்தமையும் அரசு தொடர்பிலான மக்கள் பார்வை தொடர்ந்தும் விசனத்துக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment