100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மானப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் பிரதிவாதிகளான ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, அவரது புதல்வன் ஹிராஸ் மற்றும் வாகரை பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலை கழகத்தின் முகாமையாளர் எஸ்.தாஹீர், றவூப் என்றழைக்கப்படும் அபுல்ஹசன் ஆகிய நால்வரும் எதிர்வரும் 09ம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளித்து தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பிரதிவாதிகளினால் நிர்மானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனர்.
சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகிறும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தினை 'லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி' என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்த வேலைகளை அதன் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து இதன் கட்டுமானப் பணிகள் பிரிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த இராஜங்க அமைச்சர் அவரது மகன் மற்றும் இருவருக்கு எதிராக நிர்மானப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-அனா
No comments:
Post a Comment