ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைத் தரும்படி சீனா எந்தக் கட்டத்திலும் வலியுறுத்தவில்லையெனவும் கடன்சுமையைக் குறைக்க சீன நிறுவனத்திடம் அரசாங்கமே ஒப்படைத்தது என விளக்கமளித்துள்ளார் மஹிந்த சமரசிங்க.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த கடனை அடைப்பதற்கு ஏதுவாக பிரதமர் சீனா சென்றிருந்த வேளையில் இது குறித்து நடாத்திய பேச்சு வார்த்தையின் போது, கடனை நீக்க மாற்று முதலீட்டாளர்களைக் காண்பதற்கும் முயற்சி செய்யப்பட்டதாகவும் அதற்கு சீன அரசு உதவ முன் வந்ததாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், சைனா மர்சன்ட் நிறுவனம் வலுக்கட்டாயமாக துறைமுகத்தைக் கைப்பற்றவில்லையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment