3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்முறை தோஹாவிலிருந்து கொழும்பு வந்துள்ள குறித்த நபர் இதற்கு முன்னும் பல தடவைகள் இலங்கை வந்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயணப்பொதியில் மறைத்து வைத்து 2.4 கிலோ ஹெரோயினை நாட்டுக்குள் கடத்தி வர முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment