2.5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த இந்திய தம்பதியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரமே 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தி வந்த பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இந்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறி விட்டதாக அண்மையில் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment