மும்பாயிலிருந்து 166 பயணிகளுடன் ஜெய்பூர் பயணித்துக் கொண்டிருந்த ஜெட் எயார்வேஸ் விமானத்தின் உள்ளக வாயு சமநிலையைப் பேணுவதற்கான சுவிட்ச் இயக்கப்படாமையினால் 5000 அடி உயரம் தாண்டிய நிலையில் பயணிகள் பலருக்கு காது மற்றும் மூக்கு வழியால் இரத்தம் வழிந்து விமானத்துக்குள் பதற்றம் நிலவிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாழமுக்கம் காரணமாக ஒக்சிஜன் மூடிகள் தானாக இயங்கியுள்ள அதேவேளை விமான பணியாளர்கள் குறித்த சுவிட்சினை இயக்க மறந்ததே குறித்த சம்பவத்தின் பின்னணியென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த விமானம் மீண்டும் விமானம் மும்பாயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதோடு சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விமானி மற்றும் விமானப் பணியாளர்கள் விசாரணை நிமித்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Around 30 passengers on a Jet Airways Mumbai-Jaipur flight suffered nose and ear-bleed due to low cabin pressure.— India Today (@IndiaToday) September 20, 2018
(@nagarjund, @PoulomiMSaha)
Watch more videos at https://t.co/NounxnP7mg#ITVideo pic.twitter.com/GxLVwAj3gt
No comments:
Post a Comment