ஸ்கொட்லன்ட் யார்ட் பயிற்சி நிகழ்வொன்றில் கலந்து கொள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஐக்கிய இராச்சியம் செல்லவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பூஜித உட்பட மூன்று முக்கிய பொலிஸ் உயரதிகாரிகள் பயிற்சி நிகழ்வொன்றுக்காக செல்லவுள்ளனர்.
பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரிலேயே இப்பயிற்சி நெறியில் ஸ்ரீலங்கா பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்வதாக நலின் பண்டார விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment