கண்டி: SLTB ஊழியர்கள் காலவரையரையற்ற வேலை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 September 2018

கண்டி: SLTB ஊழியர்கள் காலவரையரையற்ற வேலை நிறுத்தம்!


கண்டி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.



சபைத் தலைவரின் நியமனங்கள் தொடர்பான நிர்வாக முரண்பாட்டின் பின்னணியிலேயே இவ்வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய முகாமையாளராக தகுதியற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முறையே அப்பதவியைப் பெற வேண்டியவர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிகிறது ஊழியர் சங்கம்.

நீதியான நியமனம் இடம்பெறும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment