சகல இன மக்களின் அபிமானத்தையும் வென்றெடுத்துள்ள மைத்ரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவார் என தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
கூட்டு எதிர்க்கட்சியினரின் ஜனபலய எந்த விதத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லையெனவும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என தான் முன்னரே கூறியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஸ்ரீலசுக தெளிவாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
2019 இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் மஹிந்த அணி முடிந்தால் தேர்தல் மூலம் வென்று காட்டட்டும் எனவும் அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment